Tuesday, May 5, 2015



கடந்த 2002ஆம் ஆண்டு மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளது. இந்த தீர்ப்பு சல்மான்கானுக்கு பாதகமாக வந்தால் பாலிவுட்டில் ரூ.200 கோடி வரை முடங்கும் அபாயம் இருப்பதாக பாலிவுட் திரையுலகம் கலக்கத்தில் உள்ளது.

கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழ்க்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.

சல்மான்கான் தற்போது கரீனா கபூருடன் 'பஜ்ரங்கி பாய்ஜான்' என்ற படத்திலும், சோனம் கபூருடன் 'பிரேம் ரத்தான் தான் பாயோ' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அவர் தபாங் 3, என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சல்மான்கான் படங்களுக்காக இதுவரை பாலிவுட் திரையுலகம் ரூ.200 கோடி வரை முதலீடு செய்துள்ளது. ஒருவேளை சல்மான்கானுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மொத்த முதலீட்டுப்பணமும் முடங்கும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட்டின் முக்கிய நடிகர் சஞ்சய்தத் வேறொரு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment