Friday, May 15, 2015

விஜய், அஜித்திற்கு பிறகு சூர்யாதான் டார்கெட்! - Cineulagam
சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் மற்றும் அதன் இரண்டாம் பாகமான 'சிங்கம்-2' பெரிய வெற்றியை கொடுத்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் அடைந்தது.
தற்போது 'சிங்கம் - 3' விரைவில் தொடங்கப்படவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த படத்தின் கதாநாயகி வேறு யாரும் இல்லை, 'ஸ்ருதி ஹாசன்' தானாம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அடுத்து அஜித்தின் 'தல56' படத்திலும் நடிக்கவுள்ளார். இவரின் அடுத்த டார்கெட் 'சூர்யா'தான்.
'மாஸ்' படத்தின் ரிலீஸ்க்காக ஆவலோடு காத்திருக்கும் சூரியா, தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் '24' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவரோடு அஞ்சான் படத்தில் நடித்த சமந்தா மீண்டும் ஜோடி சேர்கிறார்.

0 comments:

Post a Comment