'லிங்கா' படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்தப்படத்தை பற்றி தான் ஏகமனதாக, தினம் ஒரு செய்தி கோலிவுட்டில் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த சூழலில் அப்படி ரஞ்சித் இயக்கும் படத்தை தாணு தயாரிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இதை தாணு தரப்பு மறுக்கிறது. ரஜினி படத்தை அவர் தயாரிக்கவில்லை என்றும், மாறாக ஐயங்கரன் பிலிம்ஸ் மற்றும் லைகா பட நிறுவனங்கள் தான் இப்படத்தை தயாரிக்கபோவதாகவும் தகவல் அடிபடுகிறது.
எதுவானாலும் சரி, ரஜினியோ, ரஜினி சம்பந்தப்பட்டவர்ளோ அல்லது ரஜினியின் படத்தை இயக்கபோகும் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர்களில் ஒருவர் படம் பற்றி உறுதியான தகவல் சொல்லும் வரையில் இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கும்.
Friday, May 15, 2015
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment