
பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தில் சிம்பு கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் ஆண்ட்ரியா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். மீதமுள்ள இரண்டு பாடல் காட்சிகளை எடுத்தவுடன் இப்படத்தினை படப்பிடிப்பினை முடித்து திரையிடப்படும்.
சிம்புவின் தந்தை விஜய டி.ராஜேந்திரன் அடுக்கு மொழி வசனங்களுடன் நடிப்பதில் வல்லவர். இவரின் நடிப்பைத் தொடர்ந்து, இவரின் மூத்த மகன் சிலம்பரசனும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவரின் இளைய மகனான குறளரசன் இசையமைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். சிம்புவின் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார்.
இதுவரை பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் குறளரசனின் இசையைக் கேட்டு அவருக்கு தன்னுடைய மிகுந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாடல்களும், குறளரசனின் இசையும் மிகவும் அருமையாக உள்ளதாக அனிருத் கூறியுள்ளார். குறளரசனின் இசையைப் பற்றி எவரேனும் தவறான தகவல்களைக் கூறினால் அதனை ஏற்க வேண்டாம் என்று அனிருத் கூறியுள்ளார். இப்படி சிம்புவின் தம்பிக்கு ஆதரவாக அனிருத் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment