நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு, இவரின் வீடு தேடி வருவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.
'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்த சுதீப் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கும்படி சமந்தாவிடம் கேட்டுள்ளனர். அதற்காக ஒரு பெரிய தொகையை சம்பளமாக தரவும் முன்வந்துள்ளனர்.
ஆனால், வில்லன் நடிகருக்கு ஜோடியாக நான் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்கமாட்டேன் என கூறிவிட்டாராம்.
0 comments:
Post a Comment