தெலுங்கு சினிமாவில் வரலாற்று படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட்டில் வரலாற்று படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பாஹுபலி, ருத்ரமாதேவி என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
ருத்ரமாதேவி படத்திற்கு 'ஆஹா ஓஹோ' என பில்டப் கொடுத்தாலும், சமீபத்தில் வெளியான ட்ரைலர் சொல்லும் அளவுக்கு இல்லை.
இப்போது விஷயம் அதுவல்ல - இந்தபடத்தில் அனுஷ்கா, நித்யா மேனன், கேத்ரின் த்ரிசா என பலர் நடித்து வருகின்றனர். ஒரு பாடலுக்காக அனுஷ்கா, நித்யா மேனன் இருவரும் ஒன்றாக நடனமாடியுள்ளார்களாம்.
அனுஷ்கா சற்று உயரம் என்பதால், நித்யா மேனனின் உயரத்தை சரிகட்ட மிக உயரமான ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து நடனமாட வைத்துள்ளனர். இதனால் இப்போது கடும் மூட்டு வலியால் அவதி பட்டு வருகிறார்.
0 comments:
Post a Comment