கோடை விடுமுறை தொடங்கியவுடனே மக்களை மகிழ்விக்க பல புது படங்கள் கடந்த வாரம் வெளிவந்தது. அதில் குறிப்பிடதக்க படம் உலகநாயகனின் உத்தம வில்லன் மற்றும் வை ராஜா வை.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது.
இதில் ஒரு சில பிரச்சனை காரணமாக உத்தம வில்லன் மட்டும் இரண்டு நாள் தள்ளி வெளியானதால் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது அந்தவகையில் ஒரு நாளில் உத்தம வில்லன் ரூ 85 லட்சம் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்து பிரம்மாண்ட வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது.
இரண்டு வாரங்கள் கடந்த பிறகும் காஞ்சனா -2 ரூ. 5 கோடி 15 லட்சம் வசூல் செய்துள்ளது. முன்றாவது இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வை ராஜா வை இடம் பெற்றுள்ளது, இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ 39 லட்சம் வசூல் செய்துள்ளது.
0 comments:
Post a Comment