Tuesday, May 26, 2015



லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா நல்ல கதையம்சம் மற்றும் வெயிட்டான கேரக்டர் இருந்தால் புதுமுக நடிகருடன் கூட ஜோடியாக நடிக்க தயங்குவதில்லை. இதற்கு உதாரணம் அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'மாயா' என்ற திகில் திரைப்படம். நெடுஞ்சாலை என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்துள்ள ஆரியுடன் இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

'மாயா' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி 'மயூரா' என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி.கல்யாண் அவர்கள் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படத்தின் தெலுங்கு உரிமையை பெற்று பிரமாண்டமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவின் 'மயூரா' படத்தையும் இரு மாநிலங்களில் மிக அதிகமான தியேட்டரில் ரிலீஸ் செய்ய இவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ரோன் எதான் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேமராமேனாக சத்யாவும், எடிட்டராக சுரேஷும் பணிபுரிந்துள்ளனர். திகில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்த படம் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment