Tuesday, May 26, 2015


காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் நடித்துள்ள 'இனிமே இப்படித்தான்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில், இவரை போலவே காமெடி புயலாக இருந்து ஹீரோவாக மாறிய வடிவேல் நடித்த 'எலி' திரைப்படமும் அதே நாளில் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
 
வடிவேல் நடித்த 'எலி' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டதால் இந்த படத்தை ஜூன் 12ல் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
1960களில் நடக்கும் கதையான எலி' படத்தில் நிழலுலக தாதாக்களை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வடிவேல் நடித்துள்ளார் என தெரிகிறது.
 
இந்த படத்தின் இயக்குனர் யுவராஜ் வடிவேலுவின் கேரக்டர் குறித்து கூறியபோது, 'எலி தன்னுடைய எதிரிகளிடம் இருந்து எப்படி தப்பிக்குமோ அதே போல் வடிவேல் தனது எதிரிகளிடம் இருந்து தப்பிப்பார் என்றும் அவருடைய பாடி லாங்குவேஜ் எலியை போலவே இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
வித்யாசாகர் இசையமைத்துள்ல இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக 'அன்னியன்' நாயகி சதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment