Tuesday, May 26, 2015


இரண்டாம் உலகம் படத்தை அடுத்து ஒரு சிறிய இடைவெளி விட்ட இயக்குனர் செல்வராகவன் புத்துணர்ச்சியுடன் தற்போது சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் மற்றும் த்ரில் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கானம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கானம் என்றால் காடு என்றும் பொருள்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
சிம்புவுடன் மெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா, டாப்சி, ஜெகபதிபாபு மற்றும் சுரேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். செல்வராகவனின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் கிருஷ்ணா இந்த படத்தை ஒளிப்பதிவு செய்கிறார்.
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், எடுத்த வரை உள்ள படத்தை பார்த்த செல்வராகவன் இந்த படம் மிகவும் திருப்தியாக வந்திருப்பதாக கூறியதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment