ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'மதராஸபட்டனம்' திரைப்படம் மாபெரும் ஹிட் ஆகியது மட்டுமின்றி ஆர்யாவுக்கு நல்ல பிரேக்கை கொடுத்தது. இந்த படத்தில்தான் லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்த ஆர்யா, அந்த இணையதளத்தின் மூலம் தனது ரசிகர்களிடம் சேட்டிங் செய்தார். அதில் 'மதராஸபட்டனம் படத்தின் இரண்டாவது பாகம் மிக விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாகவும்,அதுகுறித்த ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார். எனவே ஆர்யாவும், விஜய்யும் மிக விரைவில் மீண்டும் இணையவுள்ளதால் ஆர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆர்யா தற்போது 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க, டபுள் பேரல், பெங்களூர் டேய்ஸ் தமிழ் ரீமேக், சைஸ் ஜீரோ, இஞ்சி இடுப்பழகி, யட்சன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இன்று நேற்று நாளை மற்றும் ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment