Tuesday, May 26, 2015



கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் த்ரிஷா, சமீபத்தில் நடந்த நிச்சயதார்தம் மற்றும் ப்ரேக் அப் ஆகிய காரணங்களால் எவ்வித விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்

இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத் நகரில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' படத்தின் பிரஸ் மீட்டில் த்ரிஷா கலந்து கொண்டார். இருப்பினும் இந்த விழா முடிந்த பின்னர் செய்தியாளர்கள் ஒருசில இக்கட்டான கேள்விகளை கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்த த்ரிஷாவை, பிரஸ் மீட் முடிந்தவுடன் ஒரு பாடிகார்டு போல பிரகாஷ்ராஜ் செயல்பட்டு, செய்தியாளர்களிடம் மாட்டாமல் த்ரிஷாவை பத்திரமாக அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'அபியும் நானும்' படத்தில் இருந்தே த்ரிஷாவுடன் மரியாதைக்குரிய நட்பு வைத்துள்ள பிரகாஷ்ராஜ், தற்போது இக்கட்டான நிலையில் தனது தோழியை காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தை தவிர த்ரிஷா தற்போது அப்பாடக்கரு, போகி, அரண்மனை 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் அப்பாடக்கரு' திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

0 comments:

Post a Comment