காஜல் அகர்வால் தற்போது தனுஷ் உடன் மாரி படத்தில் நடித்து முடித்துவிட்டு, விஷாலுடன் பாயும் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஓரிரு இந்தி படத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் பிஸியான நாயகியாக வலம் வந்த காஜலுக்கு தற்போது தெலுங்கில் எந்த படமும் கைவசம் இல்லை. தெலுங்கில் வெளியான டெம்பர் படம் தான் இவரது கடைசி படம். அதன்பிறகு தெலுங்கு இயக்குனர்கள் யாரும் அவரை சீண்டாததால் கால்ஷீட் அனைத்தையும் தமிழ் படங்களுக்கு கொடுத்து விட்டார்.
கிளாமர் குறைவான கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். ரசிகர்கள் என்னை கவர்ச்சியாக பார்க்கதான் விரும்புகிறார்கள். அப்படியிருக்கையில் நான் ஏன் கிளாமரான கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments:
Post a Comment