சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், நந்திதா ஸ்வேதா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ஃபேண்டஸி படம் ‘புலி’. விஜய் நடிப்பில் ஃபேண்டஸி படம் என்பது இதுவே முதல்முறை. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.
’புலி’ படத்தின் முதல் புகைப்படங்களாக விஜய் வெள்ளை வேட்டி சட்டையில் நிற்பது போன்ற படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையம் முழுக்க ட்ரெண்டாகி வைரலானது. தற்போது அடுத்த கட்டமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

'புலி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் படத்தின் டீஸர், டிரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் இசையை ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். எனவே படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
0 comments:
Post a Comment