ஹரி இயக்கிய 12 படங்களில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிரியன். இப்போது, ‘சிங்கம் 3’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கும் பிரியன் கூறியதாவது:‘தொட்டா சிணுங்கி’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக் கொடிக்கட்டு’, ‘தெனாலி’, ‘வரலாறு’, ‘வல்லவன்’, ‘திமிரு’ உட்பட 28 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இதில், 12 படங்கள் ஹரி இயக்கியவை. அடுத்து ‘சிங்கம் 3’ படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். எங்களுக்குள் நல்ல புரிதல் இருப்பதால் தொடர்ந்து அவருடன் தொடர்ந்து பணியாற்றிவருகிறேன். இவ்வாறு பிரியன் கூறினார்.
0 comments:
Post a Comment