கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார்.
சென்னையில் ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஆந்திரா என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன்பிறகு பாடல் காட்சியை கம்போடியா மற்றும் தாய்லாந்தில் படப்பிடிப்பை நடத்தியது. பல்வேறு கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு படப்பிடிப்பு தற்போது முடிவு பெற்றுள்ளது. இதை புலி படத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தாய்லாந்தில் புகழ்பெற்ற புலி கோவில் முன் மங்களகரமாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றார் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அடுத்த கட்டமாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்க திட்டமிட்டுள்ளது. புலி படத்தை ஆகஸ்ட் மாதம்தான் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டட்டிருந்தது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் படத்தை செப்டம்பர் தள்ளி வைத்து விட்டார்களாம். இம்மாதம் இறுதியில் புலி பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment