கடந்த ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சலோனி. இவர் தற்போது ‘ஒலியும் ஒளியும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கண் தெரியாத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்து சலோனி கூறும்போது, ‘கண் தெரியாத பெண் வேடத்தில் நடிப்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. சரபம் படத்தில் அல்ட்ரா மாடல் பெண்ணாக நடித்துவிட்டு அப்படியே அந்த கேரக்டருக்கு எதிரான ஒரு கேரக்டரில் தற்போது நடித்து வருகிறேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. கண் தெரியாத நான் ஹேர்பின், பேட்டரி போன்றவற்றை தெருத்தெருவாக விற்பனை செய்யும் பெண்ணாக நடித்தேன். ஷூட்டிங் என்பதை அறியாமல் பல பெண்கள் என்னிடம் ஹேர்பின் வாங்கினார்கள். அந்த அளவுக்கு காட்சிகள் மிக இயல்பாக வந்தன.
இந்த படத்தில் நான் கொஞ்சம் கருப்பாக மாற வேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் என்னை மூன்று நாட்கள் வெயிலில் நிற்க வைத்தார். இப்படத்தில் எனக்கு ஜோடியாக லண்டனை சேர்ந்த ஜான் என்பவர் நடிக்கின்றார். இந்த படம் கண்தானம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.

0 comments:
Post a Comment