Tuesday, May 5, 2015

அஜித்தால் சிம்பு படத்துக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சனை - Cineulagam
அஜித் படத்தால் ஏற்கெனவே சிம்புவை வைத்து தொடங்கிய புதிய படத்தின் படப்பிடிப்பை கௌதம் மேனன் நிறுத்தி வைத்திருந்தார். அச்சம் என்பது மடமையடா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் வேலைகளை தற்போது கௌதம் மேனன் மீண்டும் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், அப்படத்தில் நாயகியாக நடித்து வந்த பல்லவி சுபாஷ் படத்தில் இருந்து நீங்கியிருக்கிறார்.
வட இந்தியாவில் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தவர் பல்லவி சுபாஷ். அஜித் படத்துக்காக சிம்பு படம் நிறுத்தப்பட்டதால், பல்லவி சுபாஷ் கொடுத்த தேதிகள் வீணானது.
தற்போது தேதிகள் கேட்ட போது, நாடகங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டதால் பல்லவி சுபாஷால் சிம்பு படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து படக்குழு, வேறுவழியின்றி பல்லவி சுபாஷை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது படக்குழு சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவருக்கு வலை வீசி வருகிறது.

0 comments:

Post a Comment