Tuesday, May 19, 2015

பாலிவுட்டில் கால் பதிக்கிறாரா பாபி சிம்ஹா? - Cineulagam
குறும்படம் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. இவர் நடித்த ஜிகர்தண்டா படம், இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது கூட கிடைத்தது. இவர் பாலிவுட் செல்ல ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது.
இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. ஏற்கனவே பல தமிழ் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது, சமீபத்தில் கூட விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படம் அக்‌ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜிகர்தண்டா படத்தை பாலிவுட்டில் இயக்குவதாக இருந்தால், கண்டிப்பாக கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குவார் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகின்றது. மேலும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் அவரே நடிக்கலாம் அல்லது முன்னணி பாலிவுட் நட்சத்திரம் யாராவது நடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment