Sunday, May 3, 2015


ஈ படத்துக்குப் பிறகு ஜீவா - நயன்தாரா நடிக்கவிருக்கும் 'திருநாள்' படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது. 'யான்' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்காக நிறைய கதைகளைக் கேட்டு வந்த ஜீவா, இயக்குநர் ராம்நாத் கூறிய கதை பிடித்திருந்ததால் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இப்படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். 'தெனாவெட்டு' படத்துக்குப் பிறகு இப்படத்தில் ஜீவா கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார். நகைச்சுவை, காதல், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் கும்பகோணத்தில் துவங்க இருக்கிறது. இதற்காக கும்பகோணத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. படத்தின் இசை - ஸ்ரீ; ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி; எடிட்டிங் - வி.டி.விஜயன் 'கோதண்டபாணி பிலிம்ஸ்' நிறுவனத்தின் எம்.செந்தில்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

0 comments:

Post a Comment