Sunday, May 3, 2015

 ரஜினியின் அடுத்த படம் என்ன? போகிற போக்கை பார்த்தால் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு கேள்வி தாள்களில் கூட இப்படியொரு கேள்வி இடம் பெற்றால் ஆச்சர்யமில்லை. ‘அதாண்டா என் தலைவனோட மாஸ்…’ என்று அவரது ரசிகர்கள் குதிப்பதற்கேற்பதான் நடக்கிறது எல்லாமே! நேற்றுவரை ரஜினியின் அடுத்த படம் எந்திரன் பார்ட் 2 என்றும், அதை இயக்கப் போவது டைரக்டர் ஷங்கர் என்று தகவல்கள் பரவி வந்தது. அதற்கப்புறம் நடுவில் சுந்தர்சி கூட ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். ஒரு முழு நீள காமெடி படத்தில்தான் நடிப்போமே என்று ரஜினியும் விரும்புவதாக இன்னொரு தகவல் பரவியது.

எல்லா தகவலையும் மே 3 ந் தேதி இரவு பத்தரை மணி சுமாருக்கு காலி பண்ணிவிட்டார் நிகில் முருகன். கோடம்பாக்கத்தின் பரபரப்பு பி.ஆர்.ஓ! அவர் சொன்னா அது சரியான நியூஸாதான் இருக்கும் என்று உடனடியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் சமூக வலைதள தளபதிகள். அவர் போட்டிருக்கும் ட்விட்டும் இதுதான். 
இந்த படத்தை தயாரிப்பது எந்த நிறுவனம்? ரஜினிக்கு ஜோடி யார்? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும் போல! ஒரு காலத்தில் ரஜினியின் பி.ஆர்.ஓவாவகவும் இருந்தவர் நிகில் என்பதால், இது தொடர்பான செய்திக்கு நிகிலைதான் நம்ப வேண்டும் போலிருக்கிறது.


மிச்ச சொச்சத்தையும் சீக்கிரம் சொல்லிடுங்க நிகில்!

0 comments:

Post a Comment