Monday, May 18, 2015

மீண்டும் தன் சாதனையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித்? - Cineulagam
அஜித் படங்களுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என எதிர்ப்பார்ப்பு படத்திற்கு படம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பு மே 22ம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா, ஆரம்பம் ஆகிய படங்கள் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தது.
வீரம் படம் வெளிவரும் போது, அதே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படம் ஆந்திராவில் வெளிவந்ததால் வீரம் சுமாரான வசூலை மட்டுமே தந்தது. இதனால், மீண்டும் தெலுங்கு மார்க்கெட்டை என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜித் பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

0 comments:

Post a Comment