Monday, May 18, 2015

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட்டு அவரது காதலி மற்றும் மொடல் அழகியான இகினா ஷாய்க் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர்த்துக்கல் கால்பந்து அணியின் வீரர் ரொனால்டோ, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக இகினா ஷாய்க் என்ற 29 வயது மொடல் அழகியை காதலித்து வந்தார்.
போட்டி இல்லாத நேரங்களில் இருவரும் பல நாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்தனர்.
மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக இருவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இவர்கள் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
மேலும், இருவரும் தீவிரமாக காதலித்த போது இகினாவின் செல்போனுக்கு பெண்கள் செய்தி அனுப்பினர். அதில் ரொனால்டோவுக்கு தங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து ரொனால்டோவின் செல்போனை இகினா சோதனை செய்தபோது அந்த தகவல் உறுதியானது. இதனால் இகினா தனது காதலர் ரொனால்டோவை விட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மொடல் அழகி இகினா ஷாய்க், தற்போது நடிகர் பிரட்லி ஹுப்பருடன் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment