Saturday, May 16, 2015



நித்யா மேனன் ஓ காதல் கண்மணி, காஞ்சனா என ஒரே சமயத்தில் இரண்டு ஹிட் படங்களில் நடித்து தமிழில் தன்னடைய வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு பல புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். இருந்தாலும் அவர் உடனடியாக எந்தப் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி நித்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

 பேட்டியில் நித்யா மேனன் கூறியதாவது :

எனக்கு தற்போது நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நெருக்கமான காட்சிகள், கிளாமர் காட்சிகள் ஆகியவற்றுடன் கூடிய படங்களாகவே வருகின்றன.

 அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பேங்க் பேலன்ஸ் பற்றிக் கவலையில்லை, என்று கூறியுள்ளார்.

கேரளாவிலிருந்து வரும் நடிகைகளில் பலர் கிளாமராகவும், நெருக்கமாகவும் நடிப்பது வழக்கம். கொம்பன் படத்தில் கூட ஒரு நெருக்கமான பாடல் காட்சியில் லட்சுமி மேனன் நடித்திருப்பார்.

நயன்தாரா, இனியா, ஓவியா இப்படி பல கேரள நடிகைகளும் கிளாமராக நடித்து வருகிறார்கள். ஆனால், அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக நித்யா மேனன் ஆச்சயரிப்பட வைக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

0 comments:

Post a Comment