
விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி புலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தலக்கோணம் அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடைபெற்றது.
இதையடுத்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் புலி படக்குழு முகாமிட்டிருந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தாய்லாந்தில் புகழ்பெற்ற புலி கோவில் முன் மங்களகரமாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றார். படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் திகதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், படத்தை செப்டம்பர் 17-ந் திகதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment