பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் கடைசி மூன்று படங்களும் பிளாப் ஆகியுள்ளன. இந்த நிலையில் அவருடைய அடுத்தப் படம் ஹமாரி அதுரி கஹானி விரைவில் ரிலீஸாக உள்ளது. இதுபற்றி அவர் பேட்டி அளித்ததாவது:
என்னுடைய கடந்த மூன்று படங்களும் சரியாகப் போகவில்லை. திருமணத்தால் என் சினிமா தொழிலுக்குப் பாதிப்பு நேர்ந்துள்ளதா என்றுகூட யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒரு படத்தின் வெற்றி என்பது அது நன்றாக உள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்துதான். ஒரு படத்தின் வெற்றிக்குப் பல அம்சங்கள் காரணமாக அமையும்.
திருமணம் ஆனபிறகு ஒரு நடிகையால் வெற்றிகரமாக இருக்கமுடியாது என்பது தவறு. கஜோல், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் ஆகிய நடிகைகள் திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக உள்ளார்கள். சித்தார்த் ராய் கபூரை (கணவர்) நேரில் பார்க்கும் வரை திருமணத்தைப் பற்றி நான் யோசித்ததுகூட கிடையாது. அவரைத் திருமணம் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார்.

0 comments:
Post a Comment