Monday, May 18, 2015

kajal-aggarwal-170215-600x300

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது தனுஷை வைத்து ‘மாரி’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் பாடல்களை மே 25ம் திகதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாகவே இப்படத்தின் டீசரை மே 20ம் தேதி வெளியிடவுள்ளனர். படம் ஜூலை 17ம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment