Monday, May 18, 2015

112

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தை சிம்புதேவன் இயக்கிவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஸ்ரீதேவி கபூர், சுதீப் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 150 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள புலி கோவில் முடித்துள்ளனர். இதையடுத்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
தாய்லாந்தில் உள்ள புலி கோவிலில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹன்சிகாவும், விஜய்யும் இணைந்து செல்பு புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை ஹன்சிகா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், புலி படக்குழுவுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது டுவிட்டர், பேஸ்புக் இணையதளங்களின் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது ஹன்சிகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், ‘புலி’ படத்தில் ஹன்சிகா இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment