Saturday, May 23, 2015



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் அதிமுகவில் சேர தயாராக இருப்பதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடைக்காத உண்மையான நீதியின் தீர்ப்பாகும். 

முதலமைச்சராக அவர் மீண்டும் பதவி ஏற்று, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார். அதிமுக கட்சியில் சேருவதற்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தால், கட்சியில் சேர்ந்து வளர்ச்சிக்காக பணியாற்ற தயாராக உள்ளேன்' என்றார். கன்னா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பவர்ஸ்டார், நிதி மோசடி குற்றத்திற்காக சிறைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவ்வப்போது தனது சர்ச்சைக்குரிய கருத்தால், அவர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

0 comments:

Post a Comment