Monday, May 18, 2015

முதலில் ஒப்புக்கொண்டு பிறகு விலகியது ஏன்? ரஜினியை தொடரும் சர்ச்சை - Cineulagam
மம்மூட்டி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் சென்ற மாதம் வெளிவந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம்.
சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் துரைராஜ் வாங்கியுள்ளார். சூப்பர்ஸ்டார் தானே முன்வந்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நயன்தாராவே கதாநாயகியாக நடிப்பார் என இயக்குனர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் ரஜினியோடு நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்வது உறுதியாகியிருந்தது.
ஆனால் இப்போது ரஜினி, தாணு தயாரிப்பில் - ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியான தயாரிப்பாளர் துரைராஜ், தாணுவோடு இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பாரா, இல்லை ரஞ்சித் படம் முடிந்த பிறகு ''பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment