சிம்பு கண்ணீர் விட்ட செய்தி தீயாய் பரவும் நேரத்தில் நேற்று பாண்டிராஜ் மீது டி. ராஜேந்தர் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
என் படமான இது நம்ம ஆளு படத்தை விட்டுவிட்டு சூர்யாவின் ஹைக்கூ படத்தை யும் விஷால் படத்தையும் பார்க்க சென்று விட்டார் என்று இயக்குனர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார்.
இதை அறிந்த இயக்குனர் பாண்டிராஜ் முதலில் என்னை படம் எடுக்காமல் செய்ததே டி. ராஜேந்தர் தான். என் சொந்த பணம் போட்டு பல நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறேன், பல தடவை ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்து விட்டு நடக்காமலே போய்விடும், இதனால் நயன்தாரா வின் கால் சீட் பல தடவை வீணானது .
அதன் பிறகு கடந்த வருடம் மே மாதம் அன்று படத்தின் டப்பிங் தொடங்க பட்டது அதற்கு சாட்சி, பசங்க நிறுவனத்தின் ட்விட்டர் தளத்தில் அன்றைய தினம் ட்வீட் மட்டும் புகைப்படம் உள்ளது . ஒரு நாள் கூட ஒழுங்காக சிம்பு டப்பிங் வந்து பேசவில்லை, தற்போது கூட பணம் தந்தால் உடனே படபிடிப்பை நடத்த நான் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment