ட்விட்டரில் லிங்குசாமியை விளாசிய த்ரிஷாவின் முன்னாள் மாப்பிள்ளை
மஞ்சைப் பையுடன் வந்ததாக தெரிவித்த தயாரிப்பாளர்/இயக்குனர் அதே மஞ்சப்பையுடன் போக தயாராக உள்ளார் என்று லிங்குசாமி பற்றி தயாரிப்பாளர் வருண் மணியன் தெரிவித்துள்ளார். தொழில் அதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியன் ஜெய்யை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். த்ரிஷாவுடனான திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றதையடுத்து வருண் தனது வேலைகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில் வருண் இயக்குனர் லிங்குசாமியை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில் விஜய் வசந்தின் ஜிகினா படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.
டிசியில் இன்று தயாரிப்பாளர்/இயக்குனர் ஒருவர் எங்களுக்கு எல்லாம் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் புதிய படத்தை வாங்கியுள்ளார் என்று வந்த செய்தியை படிப்பு பார்த்து வியந்தேன் என்று வருண் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வருண் லிங்குசாமியை பற்றி தான் பேசியுள்ளார்.
அந்த தயாரிப்பாளர்/இயக்குனர் வெறும் மஞ்சப்பையுடன் வந்ததாக தெரிவித்தார். தற்போது அதே மஞ்சப்பையுடன் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் சரியான பாதையில் தான் செல்கிறார் என்று ட்வீட் செய்துள்ளார் வருண்.
நான் எனது ட்வீட்களை அகற்ற மாட்டேன் தயாரிப்பாளர்/இயக்குனர் என்று லிங்குசாமி பற்றி ட்விட்டரில் தாக்கிப் பேசியுள்ளார் வருண் மணியன்.




0 comments:
Post a Comment