பாடி லாங்வேஜ் மூலம் நகைச்சுவையில் தனக்ககென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் சமீபத்தில் 'வேல்முருகன் போர்வெல்' என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்தார். இந்த படத்தை கோபி இயக்கினார். படத்தின் பைனான்சியர் என்ற பெயரில் சிவகங்கையை சேரந்த காளியப்பன் என்பவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், கோபியும், காளியப்பனும் தன்னுடைய பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை அடமானம் வைத்து என்னை ஏமாற்றி விட்டதாக சிவகங்கை குற்றபிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் கஞ்சா கருப்பு.

இதுகுறித்து அவரிடம் கேட்டபொழுது, ''எனக்கு சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள கட்டானிபட்டி. சென்னையில் எனது அலுவலகத்தில் கோபி என்ற டைரக்டர் தங்கி இருந்தார். அப்போது, சிவகங்கை அருகே உள்ள பாவாலக்குடி கிராமத்தை சேர்த காளியப்பன் என்பவர் சென்னைக்கு வந்து, 'அண்ணே நான் உங்க கூட இருந்துகிறேன்' என்று கேட்டார். முன்பின் அவரை எனக்கு தெரியாது. இருந்தாலும் நம்ம ஊர்க்காரன், நாம் தான் உதவி செய்யனும்னு தங்க வச்சேன்.
தீடீர்னு ஒரு நாள் கோபியும், காளியப்பனும் வந்து அண்ணே உங்க பேர்ல நாம ஒரு படம் எடுப்போம். ஒரு ரூபாய் கூட நீங்க போட வேண்டாம்னு சொல்லி, 'வேல்முருகன் போர்வெல்' படம் ஆரம்பிச்சோம். அந்த படம் எடுக்கும் பொழுதே பல சிக்கல் வந்து இடையில் நின்றுபோய் திரும்பவும் ஆரம்பிச்சோம். ஒரு வழியா படம் முடியப்போற நேரத்தில் தீடீர்னு ஒரு நான் கோபியும், காளியப்பனும் என்கிட்ட வந்து, 'அண்ணே உங்க நிலத்தோட பத்திரத்தை கொடுங்க. அதை அடமானம் வச்சு பணம் வாங்கனும். அப்ப தான் படத்தை வெளியிட முடியும்'னு சொன்னாங்க.
அதற்கு நான் மறுத்ததும், என் மனைவிக்கு போன் போட்டு பேசிய காளியப்பன், 'இந்த படம் வெளிவரலைனா உங்க கணவர் கேரியரே கேள்வி குறி ஆகிடும்'னு சொல்லி நிலத்தோட டாக்குமெண்ட்டை கேட்டிருக்கார். மேலும், 'படம் வெளியான பத்து நாள்ல டாக்குமெணட்டை திருப்பி தந்து விடுவோம்'னும் சொல்லியிருக்கிறார். இதனால் பயந்து போன என் மனைவி, என் பெயரில் இருந்த நிலம், என் மைத்துனர் பெயர்ல இருந்த நிலத்தோட பத்திரம் எல்லாதையும் கொடுத்து இருக்கா.
ஆனால், படம் வெளியாகி பல நாள் ஆகியும் டாக்குமெண்ட்டை தரலை. நான் போன்னி கேட்டதற்கு ஒழுங்காக பதில் சொல்றது இல்லை. பல மாசமாக என்னை ஏமாத்திகிட்டே இருந்தார் காளியப்பன். என் மைத்துனர் கேட்டதுக்கு 'அதுலாம் தரமுடியாது. முடிஞ்சத பாத்துக்க. நீங்களாம் ஏன்டா இன்னும் உயிரோடு இருக்கிங்க'னு கேட்டு இருக்கார்.
எனது சொந்த ஊரில் இருக்கும் விவசாய நிலம், மதகுபட்டியில் உள்ள மனை, மேலூரில் உள்ள நிலம் ஆகியவற்றின் டாக்குமெண்ட் அவுங்க கிட்ட இருக்கு. அதை என்ன பண்ணிணாங்க, எவ்வளவு பணம் வாங்கி இருக்காங்கனு எதுவும் தெரியலை. பல மாசம் போராடிட்டு, இனியும் பொறுக்க முடியாதுனு தான் இப்ப சிவகங்கை காவல்துறையில் புகார் பண்ணி இருக்கேன். படம்னு சொல்லி பல லட்ச ரூபாய் சொத்தை, ஆட்டைய போட பாத்தா நான் சும்மா விடுவேனா' என்றார் ஆவேசமாக.

0 comments:
Post a Comment