படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என உருவாக உள்ளது. தெலுங்கில் நாகசைதன்யா மற்றும் மஞ்சிமா மோகனும், தமிழில் சிம்புவும், மஞ்சிமாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்நிலையில் கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அப்டேட் கொடுக்கத் துவங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் தாமரை , கௌதம் மேனன் மூவரும் இணைந்து பாடல் உருவாக்கத்தில் சீரியஸாக இருப்பது போன்ற அந்த படத்தையும் மேலும் ‘ வேலை போய்க்கொண்டிருக்கிறது, என்னைப் போல் வாழ்க்கையை இசையுடன் ஓட்டுபவர்களுக்காக’ என ட்வீட் செய்துள்ளார்.
இவர்கள் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படமும் சரி, பாடல்களும் சரி இப்போதும் இளைஞர்களின் விருப்ப பாடல்கள் லிஸ்டில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. தற்போது அந்த வரிசையில் இந்த படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment