Friday, May 15, 2015


பின்னணி பாடகராகவும் மியூசிக் ஆல்பங்களில் பாடிக்கொண்டிருந்தவருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, விஷால் நடித்த ஆம்பள' படத்தின் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 'பழகிக்கலாம்' உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து கோலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. தற்போது அவர் இன்று நேற்று நாளை, தனியொருவன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, மீண்டும் விஷால் நடிக்கவுள்ள ஒரு படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'பசங்க' பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ள விஷால், இந்த படத்திற்கு ஆதியை இசையமைக்க இயக்குனரிடம் பரிந்துரை செய்ததாகவும், அதற்கு இயக்குனர் பாண்டிராஜும் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் 'பாயும் புலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வரும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அடுத்து விஷால், பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment