திருட்டு கல்யாணத்திற்கு ஒத்துழைப்பு தந்த சிம்பு - ஆண்ட்ரியா
சமீபத்தில் வெளியான 'திருட்டுக் கல்யாணம்' என்ற படத்தின் பாடல்கள் ஹிட்டாகி வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் சென்னையை சேர்ந்த வைத்தி தனது இசை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த படத்தில் இடம்பெறும் 'ஆசை மேலே' என்று தொடங்கும் முக்கிய பாடல் ஒன்றை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதிய நான், அவரிடம் சென்று தனது இசையில் பாட வருமாறு அழைப்பு விடுத்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டு எங்களுக்காக மறுநாளே பாடி கொடுத்தார். சிம்புவின் அபரீதமான ஒத்துழைப்பு காரணமாக இந்த பாடலை இரண்டே மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்துவிட்டோம்.
அதேபோன்று இன்னொரு பாடலுக்கு ஆண்ட்ரியாவை அணுகியபோது அவரும் எங்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து பாடி கொடுத்தார். சிம்புவும், ஆண்ட்ரியாவும் சிறந்த நடிகர்கள் மட்டுமின்றி நல்ல பாடகர்கள் என்பதை இந்த படத்தின் பாடல்கள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
சிம்பு, ஆண்ட்ரியா பாடிய இரண்டு பாடல்களுமே தற்போது சூப்பர் ஹிட் ஆகி வருவதால் படக்குழுவினர் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளோம்.

0 comments:
Post a Comment