சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட புலி படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் சில நாட்கள், அதன் பிறகு ஆந்திராவில் சில மாதங்கள் பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தி வந்தது.
பிறகு ஹன்சிகா, ஸ்ருதியுடனான பாடல் காட்சிக்காக படக்குழுவுடன் விஜய் வெளிநாடு சென்றார். முதலில் ஹன்சிகாவுடனான பாடல் காட்சிக்காக காம்போடியாவிற்கு சென்று படப்பிடிப்பை நடத்தினர். அதன் பிறகு ஸ்ருதியுடனான காட்சிக்காக தாய்லாந்து சென்றார். இறுதியாக தாய்லாந்தில் புகழ் பெற்ற புலி கோயிலில் படப்பிடிப்பை முடித்தனர். இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலையில் பிஸியாகி விட்டது புலி படக்குழு. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கிடையில் விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து எண்றதுக்குள்ள படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் புலி படத்தின் டிரைலரை விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள இடைவெளியில் வெளியிட்ட புலி படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதற்கு விஜய்யின் பிறந்தநாளன்று புலி பர்ஸ்ட் லுக்கை வெளியிடவிருக்கிறார்கள்.

0 comments:
Post a Comment