தமிழ் சினிமாவிற்கு என்றும் புரட்சிகரமான கதைகள் கொண்ட படத்தை கொடுப்பவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
இதில் இவரிடம் தன் அடுத்த படத்தை பற்றி கேட்டுள்ளனர். இதற்கு இவர் ‘அடுத்த படத்தை நிச்சயம் காதலை மையமாக வைத்துதான் எடுக்கபோகிறேன். காதலும் செக்ஸும் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்தபடம் பிரதிபலிக்கும்.
பெரியார், மார்க்ஸ் போன்ற பெரியவர்கள் படுக்கையறையில் இருந்துதான் தத்துவங்கள் பிறப்பதாக பதிவு செய்துள்ளார்கள். காதலும் செக்ஸையும் வைத்து வித்தியாசமான பார்வையில் அந்த படம் இருக்கும்.’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment