இந்நிலையில் பாபி சிம்ஹாவின் அசால்ட் சேது கேரக்டருக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்து. இந்நிலையில் தமிழில் வித்யாசமான கதைக்களம், கம்ர்ஷியல் என்ற ரீதியில் ஹிட்டடிக்கும் படங்களை பாலிவுட் தரப்பு ரீமேக் செய்வது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ’ரமணா’ படத்தின் இந்தி பதிப்பாக வெளியான ’கப்பர் ஈஸ் பேக்’ படம் கூட அதற்கு சரியான சான்று. இந்நிலையில் தற்போது ஜிகர்தண்டா படத்தை சாஜித் நட்யட்வாலா பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளார். மேலும் இந்தியிலும் கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குவார் என தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போது விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் ‘இறைவி’ படத்தில் பிசியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தின் நிறைவிற்கு பிறகு இந்த படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது. படத்தில் முக்கிய பாத்திரமான அசால்ட் சேது பாத்திரத்தில் பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் சித்தார்த், லட்சுமி மேனன் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாக உள்ளது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment