Monday, May 18, 2015


தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'புலி' திரைப்படத்தில் அறிமுகமான நிகிஷா பட்டேல், தமிழில் தலைவன், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் மூன்றாவது தமிழ்ப்படமான நாரதன்' படத்தில் அவர் நகுலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நாகா வெங்கடேஷ் இயக்கி வரும் இந்த படத்தில் பிரேம்ஜி அமரன் டைட்டில் வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ராதாரவி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, நிழல்கள் ரவி உள்பட பலர் நடிக்கின்றனர்.

தெலுங்கில் வெளிவந்த 'சுடிகாடி கத' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் நிகிஷா பட்டேல், இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.பிகினி முதல் அவர் எந்த கவர்ச்சி உடையையும் அணிய  எவ்வித மறுப்பும் கூறவில்லை என்றும் படத்திற்கு நல்ல ஒத்துழைப்பு தந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த படத்தில் நிகிஷா மெமரி லாஸ் குறைபாடுள்ள ஒரு இளம்பெண் கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கேரக்டரில் நடிப்பது தனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றும், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தான் மிகவும் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். மணிஷர்மா இசையமைக்கும் இந்த படத்திற்கு சஞ்சய் லோக்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை எம்.செல்வகுமார் மற்றும் ஜெயராம் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

நிகிஷா பட்டேல் இந்த படத்தை தவிர தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் 'கரையோரம்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment