கோலிவுட் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் வசூலை குவிக்கும் நடிகர் என்றால் அது சூர்யாதான். சமீபத்தில் வெளியான கிட்டத்தட்ட அனைத்து சூர்யா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, அது மாபெரும் வெற்றியையும் பெற்றது. குறிப்பாக கஜினி, 7ஆம் அறிவு, சிங்கம் ஆகிய படங்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட்
இந்நிலையில் சூர்யா நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மாஸ்' திரைப்படம், தெலுங்கில் 'ரக்ஷசூடு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.,
இந்த இசைவெளியீட்டு விழாவில் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களான நாகார்ஜுனா, பிரபாஸ், மற்றும் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள 'மாஸ்' படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி, பார்த்திபன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் அமைந்துள்ள இந்த படம் சூர்யாவின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

0 comments:
Post a Comment