
பொல்லாதவன் படத்தின் போதே காஜல் அகர்வால், தனுஷ் உடன் இணைய வேண்டியது. ஆனால் அப்போது சில கால்ஷீட் பிரச்சனையால் இருவரும் சேர முடியாமல் போனது. ஆனால் தற்போது மாரி படத்தின் மூலம் காஜல், தனுஷ் உடன் இணைந்து விட்டார்.
இந்த படத்தில் இவர்கள் இருவருக்குமான காதல் காட்சிகள் அதிகமாம். தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட இப்படத்தில் கூடுதல் நெருக்கமாகவே நடித்துள்ளாராம். நெருக்கமாக நடிக்கும் காட்சியில் தனுஷ் கொடுத்த ரொமன்டிங் லுக், பர்பாமென்ஸில் கிறங்கிப்போய்விட்டாராம் காஜல்அகர்வால்.
நான் எத்தனையோ மெகா ஹீரோக்களுடன் நடித்துள்ளேன். ஆனால் தனுஷிடம் ஒரு தனித்துவமான நடிப்பை பார்த்தேன். அவருடைய ஒவ்வொரு அசைவும் மிக இயல்பாக இருக்கிறது. பல இடங்களில் அவருடைய நடிப்பு என்னை அசர வைத்தது என்று கூறி வருகிறாராம் காஜல் அகர்வால்.
0 comments:
Post a Comment