தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர். இவர் சினிமாவில் மட்டும் தைரியமான பெண் கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் தைரியமான பெண்தான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார்.
இவர் தனது விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போதேல்லாம் பயங்கரமான சாகசங்களில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். இவருடைய சாகசங்கள் பட்டியலில் தற்போது மேலும் ஒன்றும் சேர்ந்துள்ளது.
அதாவது, கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ராய் லட்சுமி தற்போது தாய்லாந்துக்கு பயணமானார். அங்குள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்ற ராய் லட்சுமி, உயிருடன் இருந்த ஒரு புலிக்கு பாட்டிலில் பால் புகட்டி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ராய் லட்சுமி கூறும்போது, புலிக்கு பால் புகட்டவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. நான் இந்த மாதிரியான சாசகங்கள் எல்லாம் செய்யவேண்டும் என்ற பட்டியலில் இதுவும் ஒன்று. புலியுடன் சிறிது நேரத்தை கழித்தது மறக்கமுடியாத தருணமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://tamilcloud.com/cinema/raai-lakshmi-feeding-milk-to-tiger/#sthash.pVOolifE.dpuf



0 comments:
Post a Comment