'நான் நடித்துள்ள 'உலா' தமிழ் படத்தை தமிழ் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள்!' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ட்வைன் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ட்வைன் பிராவோ மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நடிப்பிலும் ஆர்வம் கொண்ட பிராவோ, சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'உலா' என்ற தமிழ்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சென்னையில் நேற்று பிராவோ இசையமைத்து வெளியிட்ட 'சலோ சலோ' ஆல்பம் வெளியீட்டு விழா நடைபெற்றது. கரீபியன் இசையை வெஸ்டர்ன் மியூசிக்கோடு கலந்து, இந்திய இசையையும் இணைத்து இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு விழாவில் சென்னை அணியின் கேப்டன் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றனர்.

மஞ்சள் நிற ஷெர்வானி அணிந்து விழாவில் கலந்து கொண்ட பிராவோ பேசுகையில், '' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் கிடைக்காதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால் அந்த 2 மாத காலத்தையும் எனது இசைப்பயணத்திற்கு பயன்படுத்தி கொண்டேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை 'உலா' என்ற படத்தில் நடித்துள்ளேன். அதற்கு பின் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.எனது நடிப்பும் நடனமும் தமிழ் மக்களுக்கு பிடிக்கும் என்று கருதுகிறேன்.
சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். டிரினிடாட் டொபாக்கோ போலவே இங்குள்ள மக்களும் இசையை மிகவும் நேசிக்கிறார்கள். விரைவில் சென்னையில் ஒரு நடனப்பள்ளியை தொடங்கவுள்ளேன் '' என்றார்.
0 comments:
Post a Comment