Tuesday, May 5, 2015

என்னுடைய டார்லிங் தயாரிப்பில் நடிப்பது சந்தோஷம் - த்ரிஷா - Cineulagam
தமிழ் சினிமாவில் ஒரு நாயகி கல்யாணம் என்று கூறிவிட்டால் போதும் அவருக்கு பட வாய்ப்புகள் வருவதே குறைவுதான், அப்படியும் வந்தால் அக்கா, அண்ணி வேடங்கள் தான் கிடைக்கும்.
ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் நாயகியாக நடிக்க கையில் அரைடஜன் பட வாய்ப்புகளை வைத்திருப்பவர் த்ரிஷா.
தற்போது இவர் சுந்தர்.சி. இயக்கத்தில் அரண்மனை 2ல் நடிக்க இருக்கிறார். இதுபற்றி த்ரிஷா கூறுகையில், என்னுடைய சிறப்பான நாளில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிக்கப் போவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் சித்தாத்துக்கு ஜோடியாக நடிக்கிறேன்.
என்னுடைய டார்லிங் தோழியான குஷ்புவின் தயாரிப்பி நிறுவனத்தில், அவருடைய கணவர் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment