மாஸ் பேய் படம் தான், ஆனா எல்லோருக்கும் பிடிக்கும்” ஜாலியாக பேசிய சூர்யா!
வெங்கட்பிரபு படம் என்றாலே இளைஞர்களை மையப்படுத்திய ஜாலி கலாய் படமாகவே இருக்கும். அதிலிருந்து வேறுபட்ட படமாக உருவாகியிருக்கிறதாம் மாஸ். சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29ல் வெளியாகவிருக்கிறது.
படத்தைப் பற்றி ஒன்ரென்றாக அடுக்க ஆரம்பித்தார் சூர்யா, “ இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்காத படம் தான் மாஸ். அதென்ன படத்தோட பெயர் “மாஸ்” அப்படினு கேட்டீங்கனா?, இந்தப்படத்துல என் பெயர் மாசிலாமணி, என்ன எல்லோரும் செல்லமா மாஸ்னு கூப்பிடுவாங்க. அதுனாலதான் படத்தோட பெயரும் மாஸ்.
அதுமட்டுமில்லாமல் இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தமிழில் வந்துவிட்டது. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமா, எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரிதான் இருக்கும்” என்று கூறினார் சூர்யா.
வெங்கட் பிரபு டீம்மே ஜாலியா இருப்பாங்க. எப்படி உங்களுக்கு செட் ஆனது என்று கேட்டதற்கு, ‘ நானும் ஜாலியான பையன் தாங்க. வெங்கட் பிரபு டீமே ஷூட்டிங் டைம்ல ஜாலியாதான் இருந்தாங்க. எனக்கே டவுட் ஆயிடுச்சி. உண்மையிலுமே ஷூட்டிங் தான் போகுதானு டவுட் ஆயிடுச்சி. அதுக்காகவே கேரவேன்ல இருக்காம ஷூட்டிங் ஸ்பாட்லையே உக்காந்து என்ன நடக்குனு பார்த்திட்டு இருப்பேன்.
இந்தப்படத்திற்கு சிக்ஸ் பேக் ட்ரைப்பண்ணிருக்கீங்களானு கேட்டதற்கு, “ சிக்ஸ் பேக் வச்சாதான் படம் ஓடும் என்றெல்லாம் கிடையாது. கதை வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா கதைக்கே படம் ஹிட் அடிக்கும். நீங்க வேணா பாருங்களேன் என்று முடித்தார் சூர்யா.
.jpg)
0 comments:
Post a Comment