Wednesday, May 13, 2015

இப்போதுதான் நடிக்க வந்த மாதிரி இருக்கிறது.. ஆனால் அதற்குள் 25 படங்களை முடித்துவிட்டாராம் கருணாகரன். இவற்றில் ரஜினிகாந்தின் லிங்கா படமும் ஒன்று!

25 படங்கள் முடித்ததையொட்டி முன்னணி காமெடியனாகிவிட்ட கருணாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தவர். அவரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்க்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர்.

0 comments:

Post a Comment