Thursday, May 14, 2015

திடிரென்று தொடங்கிய சிம்பு, செல்வராகவன் படம் - Cineulagam
நடிகர் சிம்பு உருக்கமான பேச்சு வைரலாக பரவிய பிறகு, சிம்பு மீது பலபேருக்கு நல்ல அபிப்ராயம் வந்தது என்னவோ உண்மை.
இந்நிலையில் நேற்று திடிரென்று சிம்பு - செல்வராகவன் படம் மிக ரகசியமாக தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை Glo studios என்ற நிறுவனம் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இருவரும் வகுப்பறைத் தோழர்கள் என்பது கூடுதல் தகவல்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி இருவரும் நடிக்கின்றனர்.
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடிக்க, முன்னாள் கதாநாயகனான சுரேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களின் வெற்றிக் கூட்டணியாக இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று இரவு முதல் பூஜை போட்டு தொடங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment