Wednesday, May 13, 2015

பாபநாசம் படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் புதுப் படத்துக்கு தூங்கா வனம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அவருடன் மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.
கமல் நடித்த உத்தம வில்லன் சமீபத்தில் வெளியானது. அடுத்து அவரது பாபநாசம் படம் வெளிவர உள்ளது. விஸ்வரூபம் பிரச்சினையில் இருப்பதால், அது எப்போது வரும் என்று சொல்ல முடியாத நிலை. அதற்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த கமல், அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் விஸ்வரூபம் பாணியில் ஆக்‌ஷன் த்ரில்லாராக உருவாக இருக்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த படத்திற்கு முதலில் ‘ஒரே இரவு' எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ‘தூங்கா வனம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் படத்தில் கமலுடன் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் நாயகி த்ரிஷா. அடுத்து மனீஷா கொய்ராலா. இவர் கமலுடன் இணைவது இது மூன்றாவது முறை.

அதே போல் 'காவியத்தலைவன்' படத்தில் நடித்த அனைகா ஷோதியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறார்கள். இவர்கள் தவிர்த்து பிரகாஷ் ராஜ் ஒரு கேரக்டரிலும் நடிக்கிறார்.

வழக்கம் போல் கமலின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார். படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இப்படத்தில் கமலுடன் மற்றொரு ஹீரோவும் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment