தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா. தனது இசைபயணத்தில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு புது முயற்சி ஒன்றை மேற்கொள்ள போகிறாராம் யுவன்.
அதாவது புதிய இசைக் கலைஞர்களை தனது நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யுவன் 1 ரெக்கார்ட்ஸ் என்ற பெயரில் இசை நிறுவனம் ஒன்றையும் மற்றும் Youtube Channel ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
இதில் தனது தனித்திறமை ஆல்பங்களை மட்டுமில்லாமல் மற்ற சில இசைக்கலைஞர்களின் ஆல்பத்தையும் வெளியிட உள்ளாராம். இதன் மூலம் பல புதுமுக இசைக் கலைஞர்களை உருவாக்க போகிறாராம்.
0 comments:
Post a Comment